Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்திவிளையாட்டு
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக BETI BACHAO BETI PADHAO-(BBBP) பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் 80 பள்ளி மாணவிகளுக்கு கடந்த 45 நாட்களாக தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி காவல்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
- திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக BETI BACHAO BETI PADHAO-(BBBP) பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் 80 பள்ளி மாணவிகளுக்கு கடந்த 45 நாட்களாக தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி காவல்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி முடிவடைந்த நிலையில் (19.03.2025) வாணியம்பாடி காந்திநகர் அரசு மாதிரிப்பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வழிகாட்டுதலின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) தலைமையில் பயிற்சி பெற்ற 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி முடித்த சான்றிதழ்கள் மற்றும் கராத்தே YELLOW BELT ஆகியவை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் IUCAW பாலகிருஷ்ணன், ஆய்வாளர் அன்பரசி IUCAW ,பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி