தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) மற்றும் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து கல்வராயன் மலைகளில் உள்ள நன்னிலம் சூழலியல் கிராமத்தில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வராயன் மலையில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) மற்றும் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து கல்வராயன் மலைகளில் உள்ள நன்னிலம் சூழலியல் கிராமத்தில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வராயன் மலையில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்வராயன் மலைப்பகுதியின் சூழலியல் முக்கியத்துவம் குறித்தும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பூபதி ராஜா (TNCCM), தமிழ்நாடு கல்வித்துறை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், DCCM உறுப்பினர் அரவிந்த், மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ராம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்வு, பூபதி ராஜா (நன்னிலம் ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புடன் தொடங்கியது. யசோக் சிவசுப்ரமணியம் (இயற்கையியலாளர் மற்றும் காலநிலை மாற்றச் செயற்பாட்டாளர்) வழிநடத்திய இயற்கை நடையில் மாணவர்கள் கல்வராயன் மலையின் இயற்கை சூழலையும் பல்லுயிர் வளங்களையும் அறிந்து கொண்டனர். மாணவர்கள் 26 வகையான வண்ணத்துப்பூச்சிகளையும் 20 வகையான பறவைகளையும் கண்டறியவும் அவற்றின் சூழல் முக்கியத்துவத்தையும் கற்றறிந்து கொண்டார்கள். மேலும் மாணவர்கள், நன்னிலம் சூழல் கிராமத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளை நேரில் பார்த்தனர். இதில் இயற்கை விவசாயம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மண் கட்டிடக் கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
ஜாகித் ஹாசன் மற்றும் சபரீஷ் ஐயப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு இயற்கை கட்டிட நுட்பங்களை கைக்கொடுத்து கற்றுக்கொடுத்தனர். பின்னர், இயற்கை சார்ந்த மாண்டலா வரைதல், இயற்கை நிறமுடைய போஸ்டர் தயாரித்தல், மற்றும் தோரோடாங்கோ பந்து செய்யும் கலை போன்ற செய்முறை நடவடிக்கைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இறுதியாக மாணவர்கள் இயல் மரங்களை நட்டு சுற்றுச் சூழலை பாதுகாப்பதாக உறுதி மொழியேற்றனர்.
இறுதியாக இயற்கையிலாளர் யசோக் சிவசுப்ரமணியம் நன்றியுரை நிகழ்த்தினார்..
செய்தியாளர்
மாதேஸ்வரன்