திருப்பத்தூர் மாவட்டத்தில் பசுமைத்தாய் நாடு அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டத்தில் பசுமைத்தாய் நாடு அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில்
பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இதில் நகராட்சி ஆணையர் சாந்தி தலைமையேற்றார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தொல்காப்பியன் மோட்டார் வாகன ஆய்வாளர் வாணியம்பாடி
வெங்கட் ராகவன்.
காவல் உதவி ஆய்வாளர் ரூபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் மாசு குறித்தும் பேருந்தில் எழுப்பப்படும் ஆரன்கள் குறித்தும். மரம் நடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதனை தொடர்ந்து ஒலி மாசு.காற்று மாசு. நீர் மாசு. நிலமாசு, வெப்பமாசு உள்ளிட்ட தலைப்புகளில் பசுமைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் சத்யராஜ்.ஏகே மோட்டூர் பஞ்சாயத்து தலைவர் வேலு.தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், கூழாங்கல் அறக்கட்டளை நிறுவனர் மதன்,
தமிழன் அறக்கட்டளை நிறுவனர் ராம்குமார், ஏபிஜே அப்துல் கலாம் நிறுவனர் ராஜா,
ஓசை தொண்டு நிறுவனர் விஜி,
மகளிர் மேம்பாடு அறக்கட்டளை நிறுவனர் பரிமளா,
சமூக சேவகர் அம்பலூர் அசோகன்,
சமூகப் பணி துறை தலைவர் பாதர் ஆண்ட்ரூஸ்,சமூக நலத்துறை செல்வமணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை அகிலன் குழுவினர் மற்றும்
கலைத்தாய் குழு மாவட்ட தலைவர் சாமு தலைமையில் நடன நிகழ்ச்சி பாடல் மூலம் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்..இந்த விழிப்புணர் நிகழ்ச்சி திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி அங்கிருந்து தூய நெஞ்சக் கல்லூரி அருகே ஊர்வலமாகச் சென்று நிறைவடைந்தது .நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்