Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், புல்லந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 28.03.2025 அன்று ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது….
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், புல்லந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 28.03.2025 அன்று ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது….
விழாவானது வட்டார கல்வி அலுவலர்கள் மு.ஜெயா, கோ.உஷாராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பி.சேதுபதி ஆகியோர் தலைமையிலும், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ம.முனீஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது… தலைமை ஆசிரியர் ஜோ.செந்தில் நாதன் வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன….பள்ளி ஆசிரியர் பேச்சியம்மாள் நன்றியுரை ஆற்றினார்…தேசிய கீதத்துடன் விழா சிறப்பாக நிறைவு பெற்றது…