திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ,ஆலங்காயம் அடுத்த வெள்ளை குட்டை நன்னேரி கிராமத்தில், வேலாயுதம் வள்ளியம்மாள் அறக்கட்டளை சார்பில், இலவச கணிப்பொறி பயிற்சி மையம் திறப்பு….!
வெள்ளை குட்டை நன்னேரி கிராமத்தில், வேலாயுதம் வள்ளியம்மாள் அறக்கட்டளை சார்பில், இலவச கணிப்பொறி பயிற்சி மையம் திறப்பு….!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம்,ஆலங்காயம் அருகே வெள்ளக்குட்டை நன்னேரி கிராமத்தில் வேலாயுதம் வள்ளியம்மாள் அறக்கட்டளை சார்பில் இலவச கணிப்பொறி பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. பயிற்சி மையத்தை சிறப்பு அழைப்பாளர் எஃப்.டி.எக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலர் திவாகர் பத்மராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலரும்,அறக்கட்டளை நிர்வாக இயக்குனருமான சாம்பசிவம் தலைமை வகித்தார்…
விஞ்ஞானி விஸ்வநாதன்,ஞான சூரியபகவான், ஜெயமோகன் ஸ்ரீராஜன், சிவமுருகன்,தம்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கும் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் வேலாயுதம் நன்றியுரையாற்றினார்….