சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் 12 வது ஆண்டு துவக்க விழா:சென்னை மண்ணடியில் உள்ள சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் 12ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது…
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் 12 வது ஆண்டு துவக்க விழா:
சென்னை மண்ணடியில் உள்ள சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் இயக்கத்தின் 12ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.விழாவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் செய்த சேவை குறித்தும்,பொது விஷயங்கள் சார்ந்து மனு அளிக்கும் விதம் குறித்தும்,இயக்கம் சார்ந்த அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது….மேலும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகமும் செய்யப்பட்டது… சட்ட பஞ்சாயத்து அமைப்பு 2013 ல் முதன் முதலில் சகாயம் ஐஏஎஸ் கைகளால் துவங்கப்பட்டு 11 ஆண்டு முடிந்து 12ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது…சட்ட பஞ்சாயத்து இயகதுன் பயணம் வெற்றிகரமாக செயல்பட இயக்கத்தின் நிறுவனர்
சிவ.இளங்கோ,இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் :
செந்தில் ஆறுமுகம்,மணிவாசகம்,
ஜெய் கணேஷ்,
ஜாபர்,அருள் முருகானந்தம்,
மணிவாசகம், கங்காதுரை ஆகியோர் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்தனர். SPI அமைப்பு எந்த நோக்கத்திற்கு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் இன்று வரை சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருவது பெருமைக்குரியதாகும்….தனி மனித பிரச்சனைகளுக்கு லஞ்சம் தராமல் அரசு சேவை பெறுவது குறித்து வழி காட்டுவதும் பொது விஷயம் என்றால் அமைப்பு சார்பில் நேரடியாக மனு அளிப்பது அல்லது வழக்கு தொடுப்பது என்று பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்வு கண்டு வருகிறது…சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் 12 ஆம் ஆண்டு விழாவில் புதிதாக மாநில பொதுச்செயலாளர் கங்கா சேகர் தேர்வு செய்யப்பட்டார்…. திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தியை
மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் நகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்… மேலும் 2025 ஆண்டுக்கான பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு
செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவியில் மற்றும் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…
தலைமை செய்தியாளர்
S.ராஜீவ்காந்தி