திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக YMCA பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு சமூக நீதி, போதைப்பொருட்கள், போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக YMCA
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு சமூக நீதி, போதைப்பொருட்கள், போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும், போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும், இணையவழி மோசடி பற்றியும்,காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி இன்று (28.11.2024) சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) உதவி ஆய்வாளர் ராணி மற்றும் சமூக நல அலுவலர் தலைமையில் YMCA பள்ளி திருப்பத்தூரில் YMCA பள்ளி மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்…