திருப்பத்தூர் மாவட்டம் இந்திரா நகர் அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…!
திருப்பத்தூர் மாவட்டம் இந்திரா நகர் அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…!
![]()
![]()
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சி இந்திரா நகர் துவக்கப்பள்ளியில் பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவினை பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது .. தற்காலிக ஆசிரியர் நித்தியா அனைவரையும் வரவேற்றார்….சிவா, பெருமாள், சிவக்குமார், ராம்குமார், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, நடனம்,பாடல் என்று சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன…விழா நிறைவில் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சத்யா அவர்கள் நன்றி கூறினார்..
தலைமை செய்தியாளர்
S.ராஜீவ்காந்தி