திருப்பத்தூர் மாவட்டம் சி.கே ஆசிரமம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓசை தொண்டு நிறுவனத்தின் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை நடும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் சி.கே ஆசிரமம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓசை தொண்டு நிறுவனத்தின் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை நடும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் இயற்கை ஆர்வலர் C.விஜி தலைமையேற்று மரக்கன்றுகளை வழங்கினார். செயலாளர் டாக்டர் அருள் அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் கோகுல் வாழ்த்துரை வழங்கினார்.
ஓசை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பேசுகையில்: இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அதிகமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், மேலும் நீர்நிலைகளை பாதுகாத்து பசுமையான மாவட்டமாக மாற்ற வேண்டும்,நதி நீரை இணைத்தல், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாத்து வளமான பூமியாக மாற்றுவதே நோக்கமாக கொண்டுள்ளோம். விவசாயம்,கட்டுமான துறை,மக்கள் நலம் கல்வி மேம்பாடு, மருத்துவம், இண்டஸ்ட்ரியல் மூலமாக வளரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு முக்கியத்துவம் அளித்தல் போன்ற குறிக்கோள்களை கொண்டுள்ளது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில் இந்த அறக்கட்டளை தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் மரக்கன்றுகள் ஏலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பள்ளிகள்,அங்கன்வாடி மையம்,பூங்கா, பேருந்து நிறுத்தம் என ஆட்சேபனை இல்லாத பொது இடங்களில் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் (ஓய்வு) சிவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஓய்வு) ராமமூர்த்தி,மதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன்,காவேரி கூக்குரல் சிவசுந்தர்,சி.கே ஆசிரம மேலாளர் ராஜேந்திரன், கணக்காளர் அருண், இன்ஜினியர் சரவணன்,தனி உதவியாளர் மூர்த்தி, குழந்தை மேஸ்திரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.ஏலகிரி மலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அண்ணாமலை, ஆங்கிலோ இந்தியன் ராய்,தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஓசை தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது…