திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் துறையினர் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் துறையினர்
தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வழிகாட்டுதலின் பேரில் (4.11.2024) அன்று வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மூர்பேட்டை சந்திப்பு பகுதியில் ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேல்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபு-34 மற்றும் திருப்பதி-24 ஆகியோர் இயக்கி வந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். சோதனையில் அவர் ஒட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என கண்டறியப்பட்டது. மேலும் இருவரையும் விசாரணை செய்ததில் இருவரும் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்து திருடி வைத்து இருந்த 14 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…