திருப்பத்தூர் மாவட்டம் ஏ கே மோட்டூர் ஊராட்சியில் காலநிலை மாற்றம் நீர் நிலை மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…
- திருப்பத்தூர் மாவட்டம் ஏ கே மோட்டூர் ஊராட்சியில் காலநிலை மாற்றம் நீர் நிலை மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் ஏ கே மோட்டூர் ஊராட்சியில்
காலநிலை மாற்றம் நீர் நிலை மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 11:00 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி காலநிலை மாற்றம் நீர் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதிமொழி மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் நடைபெற்றது…ஏ கே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு அனைவரையும் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் பார்த்திபன், சுகுமார், சசிகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக ஓசை தொண்டு நிறுவனத்தின் தலைவர் விஜி சின்னசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் பொம்மிக்குப்பம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் மக்கள் சுகாதார வளர்ச்சி பணிகள் அறக்கட்டளையின் இயக்குனர் முனியப்பன்,
திருப்பத்தூர் மாவட்ட வனவர் வெங்கடேசன், கூழாங்கல் அறக்கட்டளை மதன், பொதுமக்கள், தூய்மை காவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்… நிகழ்ச்சி நிறைவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காஞ்சனா சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி