கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னக்குறிச்சி நடுவூரில் பொறியாளரணி மாவட்ட தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜேஸ் ரெத்தினமணி தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது….
திமுக பொறியாளர் அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னக்குறிச்சி நடுவூரில் பொறியாளரணி மாவட்ட தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜேஸ் ரெத்தினமணி தலைமையில் பிறந்தநாள் விழா சிறப்புற கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக இராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன் கலந்து கொண்டு திமுக கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.கணபதிபுரம் பேரூர் செயலாளர் பிரபாஎழில், வழக்கறிஞரணி சகாயடெல்வர் முன்னிலை வகித்தனர். புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டு, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி,புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்புற பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட பிரதிநிதி ராஜன்,அருமைதங்கம்,வரதராஜன்,வழக்கறிஞர் முத்துக்குமார்,ஆதிதிராவிடரணி முருகேசன், நிர்வாகிகள் முத்துசுவாமி, கிருஷ்ணன், டேனியல், ஜோஸ்,சதீஸ், மாதவன், செல்வன், நாகராஜன், ராஜேந்திரன் உட்பட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…