Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கோயம்புத்தூர் கோட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சிக்கதாசம்பாளையம் திட்டப்பகுதியில் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பயனாளிகள் குடியமர்த்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கதாசம்பாளையம் திட்டப்பகுதியில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக, குடியிருப்போர் நலச்சங்கத்திற்க்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் தங்களது பெயரை கோயம்புத்தூர் கோட்ட அலுவலகத்திற்கு வருகின்ற 24.03.2025 முதல் 01.04.2025-க்குள் (காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) நேரில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கோயம்புத்தூர் கோட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சிக்கதாசம்பாளையம் திட்டப்பகுதியில் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பயனாளிகள் குடியமர்த்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கதாசம்பாளையம் திட்டப்பகுதியில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக, குடியிருப்போர் நலச்சங்கத்திற்க்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் தங்களது பெயரை கோயம்புத்தூர் கோட்ட அலுவலகத்திற்கு வருகின்ற 24.03.2025 முதல் 01.04.2025-க்குள் (காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) நேரில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மனுக்களைத் திரும்பப்பெற கடைசி தேதி 04.04.2025 (காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை)

பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல்-08.04.2025 (மாலை 5.30 மணி வரை)

தேர்தல் நாள்-16.04.2025 (காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை)

தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள்-16.04.2025 (மாலை 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) என்று கோயம்புத்தூர் கோட்டம் தமிழ்நாடு நாகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது…

செய்தியாளர் R.ராஜேஷ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button