தென் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா…!
தென் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது,
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா,சித்திரை தெப்பத்திருவிழா,மார்கழி மாத பெருந் திருவிழா, திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் ஆவணி திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சுவாமிக்கு நடத்தப்படுகிறது.அந்த வகையில் இன்று சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடம் விண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் ஆவணி திருவிழா திருக்கொடியேற்றம் இன்று காலை நடைப்பெற்றது.வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி ஒன்பதாம் திருவிழாவை ஒட்டி மாலை 05:00 மணிக்கு இந்திரன் தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் தேரில் உலா வருகின்றனர். கொடியேற்ற நிகழ்வில் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் மேயர் மகேஷ், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன்,ஒன்றிய செயலாளர் பாபு,சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்… திருவிழாவானது பத்து நாட்கள் நடைபெறுகிறது,தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது….