மாணவிகளை பாதுகாக்க கூடிய ஆசிரியரே பாலியல் அத்துமீறலில் ஈடு படுவதா-மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்…
மாணவிகளை பாதுகாக்க கூடிய ஆசிரியரே பாலியல் அத்துமீறலில் ஈடு படுவதா !- காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இயங்கி வரும் சல்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்று மது கொடுத்து பாலியல் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங்கின் செயல் மிகவும் வண்மையாக கண்டிக்கதக்கது.
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் பொன் சிங் – மீது உடனடி நடவடிக்கை எடுத்து போக்ஸோ வழக்கில் கைது செய்த காவல் துறையினரின் செயல் பாராட்ட குறியதாகும். மேலும் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்விட்லி – செயலாளர் – சையது அஹமது – ஆசிரியர் பொன்சிங் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க கூடாது என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
மாணவிகளுக்கு கல்வி மற்றும் உடற்பயிற்சி ஆண் ஆசிரியர்கள் கற்று கொடுப்பதனால் தொடர்ந்து பாலியல் அத்துமீறர்கள் நடை பெற்று வருகின்றன.ஆகவே பள்ளி மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்கள் தான் கல்வி – மற்றும் உடற்பயிற்சி கற்று கொடுக்க வேண்டும் .மேலும் பாலியல் அத்துமீறலிருந்து மாணவிகளை பாதுகாக்க தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரை கண்கானிக்க ரகசிய குழுவினை தமிழக அரசு உடனடியாக அமைத்திட வேண்டும்.
.
ஒரு சில ஆசிரியர்கள் இது போன்று செய்யும் தவறுகளால் ஒட்டு மொத்த ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதை உணர வேண்டும். மேலும் மாணவிகளை பாதுகாக்க கூடிய ஆசிரியரே பாலியல் அத்துமீறலில் ஈடு படுவது மிகுந்த வருத்ததை தருகிறது
இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.