நாட்றம்பள்ளி அருகே வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து பீரோவில் வைத்திருந்த 46 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை.
நாட்றம்பள்ளி அருகே வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து பீரோவில் வைத்திருந்த 46 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த முத்து(35) ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார்.
மனைவி ரமணாவதி மற்றும் ஒரு பெண் பிள்ளை உள்ள நிலையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் ரமணாவதி தாயார் வீட்டில் உள்ளார்.
10.03.25 இரவு முத்து வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில்
நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள ஜன்னலை கடப்பாரை மற்றும் மர கோடளியால் வெட்டி உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 46 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
11.03.25 காலை வீட்டிற்கு வந்த முத்து பின்பக்க ஜன்னல் உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
சம்பவம் குறித்து முத்து நாட்றம்பள்ளி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏடிஎஸ்பி கோவிந்தராசு மற்றும் நாட்றம்பள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆட்டு வியாபாரி முத்து காவல்துறையிடம் எப்படியாவது எங்கள் நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தாருங்கள் என கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.