கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம்….!
கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம்….!
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் நல்லகவுண்டன் பாளையம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் ஆசிரமத்தின் நிறுவுனர் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா முன்னிலையில் 25 வது ஆண்டு வெள்ளி விழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் ஏழை ஜோடிகளுக்கு (14 ஜோடி) திருமண விழா ஆகிய முப்பெரும் விழா 15.02.25 மற்றும் 16.02.25 ஆகிய நாட்களில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, முத்துகவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல்,சதாசிவன்,காளியப்பன், சத்தியமூர்த்தி,மகேந்திரன் உட்பட அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த பிரமுகர்கள்,Y’s men கிளப்,லயன்ஸ் கிளப்,ரோட்டரி கிளப், பரஸ்பரம் டிரஸ்ட் உறுப்பினர்கள்,ஶ்ரீநிவாசன் நகர் பொது மக்கள்,வாழ்க வளமுடன் குழுவினர், அட்சய பாத்திர அறக்கட்டளை, அட்சய சேவா சங்கம், சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கமிட்டியினர், வேர்ல்ட் புட் சேனல், சக்திவேல் முருகன், சாய் சுரேஷ், ஹெர்பலைப் நிறுவனத்தை சார்ந்தவர்கள், முத்துசாமி ராஜாமணி, ஜெயராமன் செல்வி, பரமேஸ்வரி, அப்துல் ஹமீது,Dr.கார்த்திக் குமார், Dr.சுரேஷ், புலவர் கணேசன், சென்னை சக்ரவர்த்தி, சென்னை பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கு எழுபதாயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. குருஜி ஷிவாத்மா அன்பு முப்பெரும் விழாவிற்கு ஆசிரமத்திற்கு வருகை தந்தவர்களையும், உதவி செய்தவர்களையும் நன்றி பாராட்டி வாழ்த்தி பேசினார். முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் சிறையில் இருந்து கருணை விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆகியோருடன் அன்பை பகிர்ந்து அவர்களுக்கு அடைக்கலம், நம்பிக்கை வழங்கி ஆதரவற்றவர்களை மகிழ்வித்து நீங்களும் மகிழ்ந்து உங்கள் சந்ததியினருக்கு புண்ணிய சொத்துக்களை சேர்த்துள்ளீர்கள் என அருளுரை வழங்கினார். நன்கொடையளர்கள் அனைவரின் குடும்பத்திலும் அன்பு, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், புண்ணியம், புகழ், தொழில், சந்ததிகள் அருள் நிலைத்து நிறைந்திருக்கவும் குருஜி ஷிவாத்மா ஆசி உரை வழங்கினார்…