திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா விழா..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா..!
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்,மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும்
மாவட்ட நூலகத்துறை சார்பில் புத்தகத் திருவிழா 2025 திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 22.3.2025 முதல்
31.03.2025 வரை 10 நாட்கள் நடைபெற்றது. இந்த புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான இன்று 31.03. 2025 அன்று இறுதி நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி பங்கு பெற்று புத்தகத் திருவிழாவினை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற
மாவட்ட வருவாய்த்துறை, மாவட்ட நூலகத்துறை, மாவட்ட கல்வித்துறை, மாவட்ட காவல்துறை, மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் பள்ளி மாணவிகள் என இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றுகளும் நினைவு பரிசுகளும் வழங்கி கௌரவப்படுத்தினார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை 61,644 பேர் அதிகமாக வருகை புரிந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த பத்து நாளில் 21 லட்சத்து 97 437 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது ..மேலும் இதில் பள்ளி குழந்தைகள், மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் அதிகமாக கலந்து கொண்டு இந்த புத்தகத் திருவிழாவை சிறப்பித்தனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி