திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர் தேர்வில் காவலர்களாக தேர்வானவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா இன்று ( 27.11.2024) பணி நியமன ஆணை வழங்கினார்…..
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர் தேர்வில் காவலர்களாக தேர்வானவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா இன்று ( 27.11.2024) பணி நியமன ஆணை வழங்கினார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2023-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது.
மேற்படி தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான 38 பேர்களில் 10 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மீதம் உள்ள 28 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் அலுவலகத்தில் இன்று பணி நியமன ஆணை வழங்கினார்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக தேர்வானவர்களில் 21 ஆண்கள் மற்றும் 10 பெண்கள், தீயணைப்புத்துறை வீரர்களாக 7 ஆண்கள் என மொத்தம் 38 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா இன்று (27.11.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேற்படி காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விழுப்புரம், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் வரும் 04.12.2024 அன்று முதல் பயிற்சி தொடங்குகிறது.