உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சுகாதார ஆய்வு…!
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சுகாதார ஆய்வு…!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு சுகாதார மருத்துவ குழுவினர் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா வராமல் தடுக்க ஒவ்வொரு கிராமமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராமத்தில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முருகப்பா ஆண்டியப்பனூர் சுகாதார மையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் P.செளந்தர்யா, சுகாதார ஆய்வாளர் வித்யாதரன் உள்ளிட்ட ஆய்வு குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதனோடு அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது எப்படி? தண்ணீர் தேங்காமல் தடுப்பது எப்படி? மழைக்காலங்களில் குடிநீரை காட்சி குடிப்பது உள்ளிட்ட நோய் வராமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர்…..