திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று 26.11.2024 இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் காவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்…
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று 26.11.2024 இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் அரசமைப்பு நாளை முன்னிட்டு கீழ்க்கண்ட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்திய மக்களாகிய நாம்,இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும்,சமயசார்பின்மையும், மக்களாட்சி முறையும், அமைந்ததொரு குடியரசு நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும்,சமுதாய,பொருளியல்,அரசியல் நீதி, எண்ணம்,அதன் வெளியீடு,கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,
சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,அவர்கள் அனைவரிடையேயும்,தனிமனிதனின் மாண்பு,நாட்டு மக்களின் ஒற்றுமை,ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய்,நம்முடைய அரசமைப்புப் பேரவையில்,1949 நவம்பர் 26ம் நாளாகிய இன்று ஈங்கிதனால் இந்த அரசமைப்பினை ஏற்று,இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது…உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் (Cyber Crime Wing), அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர்கள் இருந்தனர்…