Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது….

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது….

(CRIME MEETING) 07.04.2025-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன், செல்வராஜ், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button