நாகர்கோவிலில் விவாகரத்தான மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுதவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்….
நாகர்கோவிலில் விவாகரத்தான மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுதவர்கள் மீது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் கிறிஸ்டோ பர் சோபி (50), வக்கீலான இவர் கடந்த 6-ந் தேதி படு கொலை செய்யப்பட்டார்.இந்த நிலையில் கிறிஸ்டோபர் – சோபியின் விவகாரத்தான மனைவி உஷாதேவி (39) நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு உறவினர்களுடன் வந்து புகார் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
“எனக்கும், கிறிஸ்டோபர் சோபிக்கு விவாகரத்து ஆகிவிட்டது. எங்களுக்கு 14 வயதில் ஒரு மகளும்,12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். குழந்தைகளுக்கு என் கணவர் உயிருடன் இருக்கும் போது எந்தவித பண உதவியும் செய்தது கிடையாது..எனது கணவரின் பெயரில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பல்வேறு நில ஆவணங்கள்,ஒரு கார்,100 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவை உள்ளது. என் கணவர் இறந்த பிறகு அவருக்கு சொந்தமான சொத்துகளை என் குழந்தைகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க என் கணவரின் உறவினர்களிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கொடுக்காமல் என்னை தகாத வார்த்தையால் திட்டி அனுப்பிவிட்டனர். இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..இந் நிலையில் சொத்து விவகாரம் தொடர்பாக சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன் என் கணவரின் சொத்துக்களை என் குழந்தைகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது….