அரசியல்உள்ளூர் செய்திகள்

குமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அழகப்பபுரத்தில் நடைபெற்றது….

குமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அழகப்பபுரத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் மதியழகன் தலைமை வகித்தார்,பேரூர் செயலாளர்கள் அஞ்சுகிராமம் இளங்கோ,தேரூர் முத்து,மருங்கூர் மகேஷ்,மயிலாடி டாக்டர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அழகப்பபுரம் பேரூர் கழகச் செயலாளர் ஐயப்பன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ,குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.18 வயது பூர்த்தியானவர்களை வரும் 16, 17 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் சேர்த்தல் முகாமில் புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும். நூறு வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி முகவர் வீதம் அனைவரும் கடினமாக உழைத்து வாக்குகள் சேகரிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய பிரதிநிதி விக்டர் நவாஸ்,மாவட்ட பிரதிநிதி வக்கீல் முத்தரசு,அழகை ஜே.பி.மோசஸ், இன்னோசன்ட் ஜோசப் ராஜ்,முன்னாள் கவுன்சிலர் அழகப்பன்,அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சுயம்பு,சிறுபான்மை அணி மயிலை வேதமணி,ஜெயக்கொடி,பாலன்,அஞ்சை லிங்கம் ஒன்றிய பொருளாளர் எஸ்.வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button