த.வெ.க மாநாடு; மதுரை வடக்கு மாவட்ட தொண்டர்கள் படையெடுப்பு..!
தவெக மாநாடு; மதுரை வடக்கு மாவட்ட தொண்டர்கள் படையெடுப்பு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் (அக்.27) ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்பாக இம்மாநாடு வெற்றி பெற வேண்டி, தமிழகம் முழுவதும் தவெக சார்பில் பிரமாண்ட போஸ்டர் அமைத்தும் மாநாடு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்கள்.
இதன் ஒரு பகுதியாக மதுரையில்,த.வெ.க மாநில உறுப்பினர் சேர்க்கை துணைச் செயலாளரும் வடக்கு மாவட்டத் தலைவருமான வி.ஜயன்பன் கல்லாணை தலைமையில் கருப்பாயூரணி அருகே உள்ள முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர்,மதுரை வடக்கு மாவட்டம் முழுவதிலும் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் மாநாட்டிற்கு வரும்படி துண்டுப் பிரசுரங்களை மதுரை வடக்கு மாவட்ட தவெக நிர்வாகி சுந்தரபாண்டி தலைமையில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிர்வாகி சுந்தரபாண்டி தலைமையில் நிர்வாகி பாண்டியராஜன்,ராம் மணிகண்டன், தொண்டர்கள், உறுப்பினர்கள் அப்பகுதியில் உள்ள முனியாண்டி கோயிலில் (அக்.26) ம் தேதி மாநாடு வெற்றி பெற வேண்டி இரவு தரிசனம் செய்து, ஐந்து பேருந்துகள் மற்றும் ஒரு சொகுசு காரில் மாநாடு திடலுக்கு வந்து சேர்ந்தனர்…முன்னதாக ஒத்தக்கடை மற்றும் நரசிங்கம் பகுதிகளில் ஆங்காங்கே பிரம்மாண்டமான வால்போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.மதுரையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ளனர்….