அரசியல்உள்ளூர் செய்திகள்
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து, கும்பகோணம் மாநகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கும்பகோணம் :;
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து, கும்பகோணம் மாநகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,எம்.பியுமான எஸ்.கல்யாணசுந்தரம்,கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன்,மாநகர செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் மற்றும் ஏராளமான திமுகவினர் மாநகர திமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் வந்து பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள், மண்டல தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….