மாவட்ட மாற்றுத்திறனாளி துறை தகவல்..!
மாவட்ட மாற்றுத்திறனாளி துறை தகவல்..!
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று கணிணி பதிவுடன் யுடிஐடி எண் பதிவு பெற்றவர்களுக்கு மட்டுமே வியாழக்கிழமைகளில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணையில் மருத்துவர் சான்று வழங்குவார்.
இனி அடையாள அட்டை வேண்டும் நபர்கள் தங்களின் ஆதார்கார்டு நகல் புகைப்படத்துடன் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் யுடிஐடி பிரிவில் கணிணி பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அவ்வாறு கணிணி பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வியாழக்கிழமைகளில் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள முடியும் , மருத்துவரும் கணிணியில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே கணிணி மூலம் சான்று வழங்க இயலும்.
எனவே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் திங்கள் முதல் புதன்கிழமை வரையில் அலுவலக நேரத்தில் ஆதார் அட்டை நகலுடன் புகைப்படத்துடன் பதிவு செய்த பின் வியாழக்கிழமைகளில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணை வளாகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமில் பங்கேற்று மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை பெறலாம்.
அனைவரும் அலுவலகத்தில் கணிணி பதிவு செய்த பின்னர் முகாமில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…