உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது….

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில்
பாரக்கன்விளையில் நடந்தது. கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்…
அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும்,கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும், விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது… கிள்ளியூர் தெற்கு ஒன்றிய பகுதியான
தொலையா வட்டத்தில்
குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றம் அமைக்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு சட்டத்துறை அமைச்சருக்கும் இதற்கு முழு முயற்சி எடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் நன்றி தெரிவித்து தீர்மானிக்கப்பட்டது… அடுத்ததாக 2026 ஆம் ஆண்டு வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் கிள்ளியூர் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது…
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் துரைராஜ், பேரூர் செயலாளர் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button