உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சியில் சாலை அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சிம்மணபுதூர்  ஊராட்சியின் தலைவராக இருப்பவர் மலர் தண்டபாணி பதவியேற்று மூன்று ஆண்டுகள் முடிவடையும் நிலையில், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தான் ஊராட்சி மன்ற தலைவராக அத்தனையும் செய்து தருவேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரானார்.. 4-வது வார்டுக்கு உட்பட்ட அன்பு நகரிலிருந்து -தாதராமனூர் வரைக்கும் ஆன சுமார் 2 கிலோமீட்டர் தார் சாலையானது, இப்பொழுது ஜல்லி சாலையாக மாறிவிட்டது. தார் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பெரும்பாலான மக்கள் தலித் சமுதாய மக்களாக இருப்பதனால் தார் சாலை அமைக்காமல் புறக்கணிக்கிறாரோ…? மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறாரோ.. ? என்று மக்கள் வேதனை தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என்று எவரும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத ஒரு அவல நிலை காணப்படுகிறது. உடனடியாக ஊராட்சி மன்ற நிர்வாகமும், கந்திலி ஒன்றிய அலுவலகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது…தோழமையுடன் “நம் மக்களின் குரல்” பொம்மிகுப்பம்
ராதாகிருட்டிணன்
சமூக ஊடக மைய மாவட்ட அமைப்பாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
திருப்பத்தூர் மாவட்டம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button