உள்ளூர் செய்திகள்மதம்
குமரி மாவட்டம், அருள்மிகு மேல்புறம் இடைக்கோடு மகாதேவர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா..!
குமரி மாவட்டம், அருள்மிகு மேல்புறம் இடைக்கோடு மகாதேவர் திருக்கோயிலில் அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்படி திருக்கோயில் நிதி ரூ. 40 லட்சமும்,உபயதாரர் மூலம் ரூ.15 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து (05-09-24) குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதீஸ்குமார், ராஜேஷ், துளசிதரன் நாயர், மராமத்து பொறியாளர் ஐய்பபன், ஸ்ரீகாரியம் முத்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர் சைனி காட்டன், திருவிழா கமிட்டி செயலாளர் ஷாஜி குமார் உட்பட அதிகாரிகளும் பக்தர்கள் பங்கேற்றனர்.
–