கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லிப் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் மற்றும் இலக்கிய மன்ற விழா “ஒழுக்கத்தை ஓதுவோம்” இயக்கத்தின் சார்பில் ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு “ஒழுக்கச் சுடரொளி விருது” மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியை முல்லைமணி தலைமையில் நடைபெற்றது…

நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா முதுகலைத் தமிழாசிரியர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மோ.கலாபன் ,எஸ்.வி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தனக்கோட்டி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவி பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு ஒழுக்கத்தை குறித்து மாணவரிடையை சிறப்புரையாற்றினர். முதுகலை ஆசிரியர்கள் சின்னதுரை,பிரகாஷ், லோக நாராயணன், அசோகன், சித்ரா மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கோவிந்தராஜு, கனிமொழி, ராஜேந்திரன், பிரகாஷ், கிறிஸ்டோபர், ஆரோக்கிய லூர்துராஜ், சுரேஷ், சிவரஞ்சனி, சுதா அலுவலகப் பணியாளர்கள் சுகுணா, ராதா மற்றும் இருபால் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.