தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது….
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் பிறந்தநாள் விழா அணியின் மாவட்ட அமைப்பாளர் அ.அனஸ் தலைமையில் குலசேகரம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து காக்கச்சல் பகுதியில் கல்லூரி மேற்படிப்புக்காக மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும்
மணியன் குழி,பள்ளி முக்கு பெரியார் சமத்துவபுரம், பேச்சிப்பாறை ஆகிய அங்கன்வாடி குழந்தைகளுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அதேபோல் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கடையாலுமூடு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் திருவட்டார் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் ஜாண்சன்,மேல்புறம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஷைனி காட்டன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்….