திருக்கோவிலூரில் பிறந்த மாமன்னர் இராஜராஜ சோழனின் 1039 – ஆம் ஆண்டு சதயவிழா….
திருக்கோவிலூரில் பிறந்த மாமன்னர் இராஜராஜ சோழனின் 1039 – ஆம் ஆண்டு சதயவிழா….
திருக்கோவிலூர்: கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் வீரட்டானேசுவரர் ஆலய வளாகத்தில் இராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதயவிழா நடைபெற்றது.விழாவிற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமை வகித்தார்,சுகந்தி வெங்கடேசன் திருமுறை இசைத்து விழாவைத் தொடக்கி வைத்தார்.ரோட்டரி சங்கத் தலைவர் சேவைச் செம்மல் மு.செந்தில்குமார் மாமன்னர் இராசராசசோழனின் திருவுருவப்படத்தினைத் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் துரைமுருகன், வேட்டவலம் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் தங்க விசுவநாதன், திருவண்ணாமலை கம்பன் கழகத் தலைவர் சாய் ரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்ச்சங்கச் செயலாளர் பாரதிமணாளன் வரவேற்றார்,
பொருளாளர் குருராசன் தொடக்கவுரையாற்றினார்.மேனாள் அரசுக் கல்லூரி முதல்வர் மு.ரவிச்சந்திரன், முனைவர் ஜனசக்தி ஞானவேல், கவிஞர்கள் கலைச்சித்தன், குப்பனார், திம்மனந்தல் தெய்வ தமிழ்ச் சங்கத் தலைவர் மாரியம்மாள் ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்க மகளீரணித் தலைவர் செல்லம் ஆகியோர் இராசராசனின் ஆளுமைத் திறன் என்ற தலைப்பில் பேசினர்.
செயல் அலுவலர் வை.அறிவழகன்,திருவண்ணாமலை நமசிவாயா நாட்டியாலயாவின் குரு,ஆஷா குமாருக்கும், திருக்கோவலூர் கலையரசி கலைச் சேத்ரா பள்ளியின் குரு,சீ.லாவண்யா கிருஷ்ணனுக்கும் ஆடல்வல்லான் அருள் நர்த்தகி என்ற விருதினை அளித்துப் பாராட்டிப் பேசினார்.
அறங்காவலர் குழுத் தலைவர் கோ.ஜெயசங்கர் தேவாரப்பாடல் போட்டி மற்றும் பேச்சரங்கில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசும் சான்றிதழ்களும் வழங்கினார்.
கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களையும் கவிஞர் ஜெயக்குமார் வழங்கினார்.
கோயில் எழுத்தர் மிரேஷ்குமார், மித்ராதேவி, ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பேச்சாளர் அ.சிதம்பரநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு, கி.பி. 947 இல் ஐப்பசி சதயத்தில் திருக்கோவலூரில் பிறந்த இராஜராஜ சோழருக்கு, திருக்கோவலூரில் அரசு சார்பில் பிறந்தநாள் விழா நடத்த ஆவண செய்யவும், திருவுருவச்சிலை நிறுவவும்,திருமுறை மணிமண்டபம் அமைக்கவும், இராசராச சோழன் பெயரில் விருது அளிக்கவும் கோரிக்கை விடப்பட்டது.
விழாவில் தமிழ்ச் சங்கநிர்வாகிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கவிஞர் அய்யப்பன் நன்றி கூறினார்.