கும்பகோணம் பாணாதுறை மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது….
கும்பகோணம்
பாணாதுறை மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு நல்லாசிரியர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார்,தலைமை ஆசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார்,ஆசிரியர் மகாலட்சுமி
ஆண்டறிக்கை வாசித்தார்,ஆசிரியர் சுஜாதா நூற்றாண்டு உறுதிமொழி வாசித்தார். இவ்விழாவில்
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் அளித்து பாராட்டி உரையாற்றினார்.. இந்நிகழ்ச்சியில் இந்நாள்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்,பள்ளி முன்னாள் மாணவர்கள்,தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கா.பன்னீர்செல்வம், மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா இறுதியில் பள்ளியின் அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்த
நல்லாசிரியர் மோகன்தாஸ் நன்றியுரை கூறினார்.. முன்னதாக
பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.