கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடைவிழா ஒன்பதாம் நாளில் பெரியச்சக்கர தீவெட்டி ஊர்வலம் மற்றும் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி…
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடைவிழா ஒன்பதாம் நாளில் பெரியச்சக்கர தீவெட்டி ஊர்வலம் மற்றும் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் எழுந்தருளல் சுமார் 9 அடி உயரம் கொண்ட சக்கரம் போன்ற தீவெட்டியில் சுமார் 41 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, தீவெட்டியானது பக்தர்களால் இழுத்துச் செல்லப்படுவது வழக்கம்.இந்த தீ வெட்டியானது, கோயிலின் உள்ளே கன்னி மூலையில் வைக்கப்பட்டிருந்தது. இது ஆகம விதியில் தவறு என்பதால், தற்போது அக்னி மூலையில் திருக்கோயில் நிதியில் புதிதாக ரூ. 4.50 லட்சம் செலவில் அறை கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து பெரிய சக்கர தீ வெட்டி விடும் நிகழ்ச்சி நடந்தது.இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மராமத்து பொறியாளர் ஐயப்பன்,கோயில் மேலாளர் செந்தில் குமார்,தீ வெட்டி கமிட்டி தலைவர் முருகன்,பகவதி குருக்கள் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
—