கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பங்கேற்பு…!
நவராத்திரி விழா..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில்
தமிழக பிரதிநிதியாக
பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்பு…!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகப் எடுத்துச் செல்லப்படும்… வழி நெடுகளிலும் பொதுமக்கள், பக்தர்கள் மரியாதை செய்து வரவேற்பு அளிப்பர்.இரு மாநிலங்கள் கொண்டாடும், இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தலைமை செயலக அலுவலக தர்பார் ஹாலில் நடந்தது. கேரள தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன்,தேவசம் போர்டு தலைவர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன்,குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர்,பத்மநாபபுரம் தொகுதி சூப்பிரண்டு சண்முக பிள்ளை, வேளிமலை முருகன் கோயில் மேலாளர் மோகன்குமார், செய்தி தொடர்பு அலுவலர் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழகம் சார்பில் பாதுகாப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம், உடைவாள் மாற்றம் நிகழ்வுகள் முறையாக செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
–