கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரக் கோயில் முருகன் கோவிலில் கிணறு பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் …
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரக் கோயில் முருகன் கோவிலில் திருக்கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீர் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் நெய்வேத்தியம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கிணறு பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் கோவிலுக்குள் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கிணற்றிலிருந்து பூஜைகளுக்கு தண்ணீர் எடுப்பதில்லை,பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்த கிணற்றை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.கோவிலில் உள்ள கிணறு புனித தீர்த்த கிணறாக பெரியோர்களால் பார்க்கப்படுகிறது. இந்த கிணறு பராமரிப்பு இல்லாமல் இருந்து வருவதை பக்தர்கள் வேதனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கிணற்றை ஆய்வு செய்த அறங்காவல் குழு தலைவர் பராமரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்..மேலும் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் என்பதால் தொல்லியல் துறை ஆய்வுக்கு பின் கிணறு பராமரிக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வில் மராமத்து பொறியாளர் ஐயப்பன், கோவில் ஸ்ரீ காரியம் மோகன் குமார் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். பராமரிப்புக்கு பின்பு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் நெய் வேத்தியம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.