குமரி மாவட்ட கிறிஸ்துவ கல்லறைத் தோட்டங்களில் ஆன்மாக்கள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது….
குமரி மாவட்ட கிறிஸ்துவ கல்லறைத் தோட்டங்களில் ஆன்மாக்கள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது…ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் தேதி கிறிஸ்துவ தேவாலயங்களில் ஆன்மாக்கள் திருவிழா கொண்டாடப்படும். வழக்கம்போல் இன்றும் அந்த திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள ஊர்களில் இருக்கும் கல்லறை தோட்டங்களில் சமாதிகளில் உறவினர்கள் மலர் மாலை வைத்து பத்திகள் ஏற்றி வைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை வைத்து வழிபடுவார்கள் முன்னதாக கல்லறையை சுத்தம் செய்து வர்ணம் பூசி அழகுப்படுத்தினர். இந்த நாள் மிகப் புனிதமான நாளாக கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது..ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழா இன்று ராமன்புதூர் திருகுடும்ப ஆலய பங்குத்தந்தை சகாய பிரபு,மேலராமன்புதூர் பங்குத்தந்தை
மரிய சூசை வின்சென்ட்,
புன்னைநகர் பங்குத்தந்தை மைக்கேல் பிரைட், தளவாய்புரம் பங்குத்தந்தை
ஜான் மில்டன், கன்னியாகுமரி கோவளம் கடற்கரை மற்றும் உள்நாட்டு கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளில் ஆன்மாக்கள் திருவிழா என்ற நிகழ்வு நான்கு முப்பது மணி அளவில் நடைபெறுகிறது…