கோவை மாவட்டத்தில் நுரையீரல் -சுவாசநோய்கள் குறித்த தேசிய மாநாடு 21 வருடங்களுக்கு பின் 4 நாட்கள் நடக்கிறது
கோவை மாவட்டத்தில்
நுரையீரல் -சுவாசநோய்கள் குறித்த தேசிய மாநாடு
21 வருடங்களுக்கு பின் நடக்கிறது
நுரையீரல் -சுவாசநோய்கள் குறித்த தேசிய மாநாடு,21 வருடங்களுக்கு பின் கோவையில்,4 நாட்கள் நடக்கிறது.
கோவையில் நுரையீரல் மற்றும் சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு (நாப்கான் 2024) நேற்று துவங்கி,24ம் தேதி வரை பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது. தேசிய நுரையீரல் டாக்டர்கள் கல்லுரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள சுவாச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை நுரையீரல் மருத்துவத்தில் உலக புகழ்பெற்ற டாக்டர் பேராசிரியர் அதுல்சி மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் 2,200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்த 54 பேரும், தேசிய அளவில்,640 பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்கள்.
மேலும் இந்த மாநாட்டில் நுரையீரல், அது தொடர்பான தீவிரசிகிச்சை மற்றும் சுவாச மருத்துவம் ஆகியவற்றில் சமீபத்திய முன்னேற்றங்களை உள்ளடக்கிய,9 அமர்வுகள் இடம் பெறுகிறது..இந்த துறையில் முன்னணி மருத்துவ நிபுணர்களின் 600 சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது..
தொடர்ந்து ஆஸ்துமா நோய்கள் குறித்தும் அதற்கான நிவாரணம் குறித்த முக்கிய விவாதங்களும், அதில் தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்கள் குறித்தும் பங்கேற்பாளர்களிடையே விவாதங்களும் நடைபெறுகிறது.
இது குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன்குமார் கூறுகையில்:: சுவாசநோய்கள் அதிகரிப்பு என்பது ஒரு குறிப்பிடத்தக்க பொதுசுகாதார கவலையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விவாதம் செய்ய உலகம் முழுவதிலுமிருந்து, 2,200 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என்றார்.
நுரையீரல் மருத்துவ மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன்குமார், செயலளார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் கோவை மருத்துவ நிபுணர்கள் செய்துள்ளனர்.