திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் மற்றும் உதவும் உள்ளங்கள் அமைப்பு இணைந்து நீர்,மோர் கூழ் வழங்கும் துவக்க விழா நிகழ்வு நகராட்சி பூங்கா எதிரில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn. G.வெங்கடேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது….
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் மற்றும் உதவும் உள்ளங்கள் அமைப்பு இணைந்து நீர்,மோர் கூழ் வழங்கும் துவக்க விழா நிகழ்வு நகராட்சி பூங்கா எதிரில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn. G.வெங்கடேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மற்றும் விஜயா கேலக்ஸி உரிமையாளர் K.M.மதியழகன் மற்றும் ரோட்டரி தலைவரும் இணைந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர்.இந்நிகழ்வில் பாரதி, புரட்சி, கிருஷ்ணன், ஆனந்தன், பன்னீர்செல்வம்,சங்கர்,ஆஞ்சி,சுபாஷ்,செல்வராஜ், புகழேந்தி,தண்டபாணி ,ரவிந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நீர்,மோர்,கூழ் அருந்தி விட்டு மகிழ்வுடன் வாழ்த்தி சென்றனர்.இறுதியாக செயலாளர் வெங்கடாசலம் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்வினை நிறைவு செய்தார்.
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி