திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் நாட்டறம்பள்ளி காவல் நிலையம் சந்தைமேடு பகுதியில் உள்ள விநாயகம் (58) என்பவர் நகைக்கடையில் திருடு போன நகைகள் மீட்பு…!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் நாட்டறம்பள்ளி காவல் நிலையம் சந்தைமேடு பகுதியில் உள்ள விநாயகம் (58) என்பவர் நகைக்கடையில் கடந்த 01.10.2024 அன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த சுமார் 9.5 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றார். இது குறித்து காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டவர் ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கவிதா (எ) நேத்ரா (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கவிதாவை கைது செய்து அவரிடம் இருந்து திருடிய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு 04.10.2024 நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை நகையுடன் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட நாட்டறம்பள்ளி காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகள், தெருக்களில் CCTV கேமராக்களை அமைத்து பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி குற்ற சம்பவங்களை தடுக்கவும், முன்பின் தெரியாத நபர்களிடம் மிகவும் கவனமுடன் இருக்கவும் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர்
S.ராஜீவ் காந்தி