திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் 03.10.2024 திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்டூர் பகுதியில் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் 03.10.2024 திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்டூர் பகுதியில் உதவி ஆய்வாளர் ராஜு,தலைமை காவலர் முருகானந்தம் ஆகியோர் மேற்கொண்ட வாகன சோதனையில் சட்டவிரோதமாக Tata Sumo வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 1.5 டன் ரேஷன் அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கைக்காக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி கடத்தல் அரசியை வாகனத்துடன் பிடித்த உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
மேலும் இது போன்ற சட்டவிரோத செயல்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் காவல்துறையினரிடம் பகிர்ந்து சட்டவிரோத செயல்களை தடுக்க காவல்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்
S. ராஜீவ் காந்தி