திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் ஆய்வாளர் யுவராணி தலைமையில் சைபர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் ஆய்வாளர் யுவராணி மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் இன்று (29.10.2024) G.P.Pharmacy College மண்டலவாடி,பொன்னேரியில் கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…
நிகழ்ச்சியில் இணையவழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றியும், அக்குற்றவாளிகளிடம் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும்,சமூக வலைதள குற்றங்கள் பற்றியும், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது… மேலும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் cybercriyme.gov.in வலைதளம் பற்றியும், இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர் பொன்னுசாமி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்….