Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று மனு ரசீது பதிந்து அதன் விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல்நடவடிக்கைக்காக அனுப்பி இருந்ததின் பேரில், மனுக்கள் சம்பந்தமாக துரிதமாக விசாரணை மேற்கொண்டதின் பேரில் மாவட்டம் முழுவதும் 169 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று மனு ரசீது பதிந்து அதன் விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல்நடவடிக்கைக்காக அனுப்பி இருந்ததின் பேரில், மனுக்கள் சம்பந்தமாக துரிதமாக விசாரணை மேற்கொண்டதின் பேரில் மாவட்டம் முழுவதும் 169 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்… அதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சத்து 5 ஆயிரத்து 813 (Value Rs.30,05,813/-). கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் இன்று (02.04.2025) காலை 10:00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலக Conference Hall-ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மீட்கப்பட்ட 169 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நேரடியாக வழங்கினார்….

சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் எனவும், இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது சம்பந்தமாக ஏதேனும் தகவல் கிடைக்கப் பெற்றாலும் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் 24*7 காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் / வாட்ஸ்-ஆப் எண் 9442992526 ஆகியவற்றில் புகார்கள் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் சைபர் கிரைம் எவ்வாறெல்லாம் நடக்கிறது. தற்போது நடைமுறையிலுள்ள Loan APP, KYC update, Online investment, Part Time Job fraud தருவது போன்றவைகளில் ஏமாறாமல் தற்காத்து கொள்வது பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. சைபர் கிரைம் நடைபெறாமல் பார்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும். சைபர் கிரைம் நடந்து விட்டால் 1930 என்ற Help line-ஐ தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் இணையவழி புகாருக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். மேலும் சைபர் கிரைம் நமக்கு தெரியாமல் நடப்பதில்லை. நம்முடைய துணையால் தான் நடக்கிறது என்பது பற்றிய தெளிவான விளக்கமும் எடுத்துரைக்கப்பட்டது….

தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button