அரசியல்உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் நகராட்சி 28 வது வார்டு புதுப்பேட்டை சாலையில் உள்ள மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை…!

திருப்பத்தூர் நகராட்சி 28 வது வார்டு புதுப்பேட்டை ரோடு ரேஷன் கடை அருகே இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக வீடுகள் மற்றும் சாலைப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் உறக்கம் இன்றி வீடுகளில் உள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் தவித்தனர்… மேலும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது… ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button