Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்படி (14.03.2025) கந்திலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரியம்பட்டி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் POCSO, இணையவழி குற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெருகிவரும் சைபர் குற்றங்களான டிஜிட்டல் கைது மோசடி (தங்களை காவல்துறையினர் Digital arrest செய்து இருப்பதாக கூறி பணம் பறித்தல்), TASK மோசடி( டாஸ்க் செய்தால் அதிக பணம் தருவதாக கூறி) , online trading மோசடி, online investments மோசடி (சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி), ஏதேனும் அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான சமூகவலைதள குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இணையவழி புகார் உதவி எண்: 1930 , பெண்கள் பாதுகாப்பு உதவி எண்: 181, குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி எண் : 1098 மற்றும் மதுவிலக்கு தொடர்பான புகார் உதவி எண் :10581 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வருவாய், நீதித்துறை அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

தலைமை செய்தியாளர்

S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button