உள்ளூர் செய்திகள்குற்றம்மதம்
தென்காசி அருகே செங்கோட்டை தொகுதி சாம்பவர் வடகரை அருள்மிகு ஶ்ரீ மூலநாத சுவாமி திருகோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு..
தென்காசி அருகே செங்கோட்டை தொகுதி சாம்பவர் வடகரை அருள்மிகு ஶ்ரீ மூலநாத சுவாமி திருகோயிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் செலுத்தாமல் இருந்தனர். அவர்களிடமிருந்து 5 ஏக்கர் நிலம் அளவீடு செய்து மீட்கப்பட்டது. அளவீடுகள் முடிந்து அந்த இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கும் பணிகள் திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது . மீட்கப்பட்ட நஞ்சை நிலங்களின் அரசு மதிப்பு சுமார் ரூ. 20 லட்சமாகும். கண்காணிப்பாளர் ஆனந்த், பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீ காரியங்கள் கோபாலகிருஷ்ணன், நவீன், திமுக கிளாங்காடு கிளை செயலாளர் ராமர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
–