உள்ளூர் செய்திகள்
கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளியில் மாணவிக்கு பரிசு…
ஆசிரியர் தின நாளில் மாணவிக்குப் பரிசு:
கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியர் நாள் விழா 5.9.24 அன்று தலைமையாசிரியர் K.சரவணக்குமாரி தலைமையில் நடைபெற்றது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நெடுஞ்செழியன் தனது வரவேற்புரையில் பள்ளியின் முன்னாள் மாணவரும் தேசிய விருதாளருமான முனைவர் மு.செல்வசேகரனை அறிமுகப்படுத்திப் பேசினார்.
பத்தாம் வகுப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவி தீபிகாவை பாராட்டி ஆக்சுபோர்டு அகராதியை பரிசாக வழங்கிய முனைவர் மு.செல்வசேகரன் ஆசிரியர்களின் அருமையை உணர்ந்து மாணவர்கள் கற்கவேண்டும் என்றார்.
மாணவி தீபிகா ஆசிரியர்களின் சிறப்பு குறித்துப் பேச,ஆசிரியர் மலைச்சாமி விழாவின் நோக்கம் பற்றி உரையாற்றினார். ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.