உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்…

திருப்பத்தூர் மாவட்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்…

திருப்பத்தூர் மாவட்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்,அரசு ஊழியர் ஐக்கிய பேரவை காப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் வழிகாட்டுதலில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் மாவட்ட தலைவர் கவிஞர் செ.ராஜி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சிவராமன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சித் தலைவர் இடத்தில் வழங்கினார்கள்.அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 16 ( 4) (A) வை பயன்படுத்தி பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். பல்வேறு அரசு ஊழியர்களின் பதவி உயர்வுகள் பறிக்கப்பட்டு கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதேசமயம் கீழ்நிலை பதவியில் இருந்தவர்கள் பதவியில் உயர்வு பெறுவதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவைகள் மட்டும் அல்லாமல் பதவி உயர்வு பெறுவதற்கு தயார் செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் தக்கார் பட்டியலில் கீழ் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.. இதனால் இனி பட்டியல் மற்றும் பழங்குடியின பணியாளர்கள் எப்போதும் உயர் பதவியும் பதிவு உயர்வும் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டியல் என அரசு ஊழியர்களுக்கான உரிமையை பெற்றிட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு துறையில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டிய பின்னடைவு காலி பணியிடங்கள் சுமார் 11,000 பணியிடங்கள் உள்ளன… தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் அதனை கண்டறிந்து நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்தும் பல துறைகளில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முன்னெடுப்புகளை தொல்.திருமாவளவன் எடுத்துக் கூறிவரும் நிலையில் இதனை விரைவு படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களை நேரடியாக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான தகவல்களை தமிழ்நாடு அரசுக்கு குறித்து நேரத்தில் வழங்கிட வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு எண் 16(4) A யினை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி தமிழ்நாடு அரசின் பணியாற்றி வரும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்து தந்தை பெரியார்,கருணாநிதி கருத்தியல் வாரிசு தான் திராவிட மாடல் அரசு என்பதை தமிழகத்தில் உறுதிப்படுத்த வேண்டுமாய் தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.மனு அளிக்கும் போது திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஆனஸ்ட் ராஜ், மாவட்ட நிதி செயலாளர் ஆசிரியர் குமார்,மாவட்ட துணைத் தலைவர்கள் கந்தன், ச.முத்துக்குமரன்,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தங்கபாண்டியன்,அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டம் மாவட்ட செயலாளர் குரிசில்மணி , மாவட்ட ஒன்றிய நகர அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் பொறுப்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் உடன் இருந்தனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button