திருப்பத்தூரில் குண்டும் குழியுமான உள்ள தோக்கியம் சாலை..!
திருப்பத்தூரில் குண்டும் குழியுமான உள்ள தோக்கியம் சாலை சீரமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோக்கியம் ஊராட்சி சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து குண்டும் குழியமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலை நாரியூர், மண்டலநாயக்கன்குண்டா, லட்சுமிபுரம் வழியாக பர்கூர் பெண்கள் கலைக் கல்லூரிக்கு சென்றடையும் சாலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்ற சூழலில் தோக்கியத்திலிருந்து மண்டலநாயக்குண்டா வரைக்கும் சுமார் இரண்டு கிலோமீட்டர் சாலை சிறு மழை பெய்தாலே நீச்சல் குளமாக காட்சியளிக்கிறது.
இதனால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி மற்றும் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளனர்…